ADDED : ஆக 14, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
ஆன்மிகம்
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேக அலங்கார ஆராதனை,- காலை 9:00 மணி. இடம்: கல்லூரி சாலை, கவுரிவாக்கம்.
சீனிவாசன் பெருமாள் கோவில்
கம்ப ராமாயண சொற்பொழிவு,- புலவர் அரங்கராசன்,- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
திவ்யபிரபந்த பாராயணம்
அருளிச்செயல் கைங்கர்ய சபா சார்பில், திவ்ய பிரபந்த பாராயணம், காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: குமரன் அனுக்ரஹா கல்யாண மண்டபம், ஆரியகவுடா சாலை, மேற்கு மாம்பலம்.
பொது
இலவச மருத்துவ முகாம்
ஸ்ரீநிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கம் சார்பில், இலவச கண்புரை நீக்கும் முகாம், காலை 8:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சைமா மெடிக்கல் சென்டர், தேரடி தெரு, திருவல்லிக்கேணி.
