/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிப்பறைகள்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் கழிப்பறைகள்
ADDED : நவ 03, 2025 01:38 AM
சென்னை: பெண் காவலர்கள் பயன்பாட்டிற்கென, 50க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள், 10 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வருகின்றன.
சென்னையில் கவர்னர், முதல்வர் மற்றும் வி.ஐ.பி.,க்கள் செல்லும் சாலைகளில், போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில், போக்குவரத்து போலீசார் ஈடுபடுகின்றனர்.
வெகுநேரம் ஒரே இடத்தில் நின்று பணியாற்றும் நிலையில், அவசரமாக சிறுநீர் கழிக்கக்கூட வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், 50க்கும் மேற்பட்ட இடங்களில், சமூக பங்களிப்பு நிதியை பயன்படுத்தி, போலீசாருக்கான கழிப்பறை வசதி செய்து தரப்பட்டன.
இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, 10 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் வீணாகி வருகின்றன.
இதுதவிர, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம், ஆடம்ஸ் சாலை சந்திப்பு, பல்லவன் இல்லம் என, ஐந்து இடங்களில், பெண் காவலர்களுக்கு இந்தாண்டு மார்ச்சில், பயோ - டாய்லெட்டுகள் திறக்கப் பட்டன. அவை தற்போது தண்ணீர் வசதியின்றி முடங்கியுள்ளன.
தினசரி போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் அவசர உபாதைகளை கழிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், புதிதாக அமைக்கப்பட்ட கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெண் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

