நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், ஆதிசேஷ தீர்த்த குளத்தில் நாளை மாலை 6:00 மணிக்கு தெப்போற்சவம் நடக்க உள்ளது.
இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தினர். இதில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பக்தர்கள் படிக்கட்டுகளில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 200 போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குளத்தின் வடக்கு மற்றும் தெற்கு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு நான்கு புறமும், எட்டு படிக்கட்டுகளில், பக்தர்கள் நெருக்கடியின்றி இடைவெளி விட்டு அமர அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

