/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாளை எம்.டி.சி., ஊழியர்கள் வேலைக்கு வர கண்டிப்பு
/
நாளை எம்.டி.சி., ஊழியர்கள் வேலைக்கு வர கண்டிப்பு
ADDED : பிப் 15, 2024 12:55 AM
'மத்திய அரசுக்கு எதிராக நடக்க உள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல், ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும்' என, மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து,கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கிஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற்சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 16ல், தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல், தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும்.
வரும் 16ம் தேதிக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.
பணிக்கு வராதவர்கள் மீது நிலையாணை விதிப்படி ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு துாண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

