ADDED : ஜன 03, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், அயனாவரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 37; வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடை நடத்தினார். இவருக்கு, இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் நேற்று அதிகாலை, வில்லிவாக்கத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்ற போது, வேகமாக வந்த கார், இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட பிரேம்குமார், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த நபர், கரை விட்டு விட்டு தப்பினார்.
தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து போலீசார், பிரேம்குமார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் ஓட்டுனர் குறித்து விசாரிக்கின்றனர்.