/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெட்ரோ' பணியால் கடைகள் மூடல் அரசிடம் இழப்பீடு கோரும் வணிகர்கள்
/
'மெட்ரோ' பணியால் கடைகள் மூடல் அரசிடம் இழப்பீடு கோரும் வணிகர்கள்
'மெட்ரோ' பணியால் கடைகள் மூடல் அரசிடம் இழப்பீடு கோரும் வணிகர்கள்
'மெட்ரோ' பணியால் கடைகள் மூடல் அரசிடம் இழப்பீடு கோரும் வணிகர்கள்
ADDED : நவ 08, 2024 12:17 AM
சென்னை,மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி நடக்கும் இடங்களில், மூடப்பட்ட தொழில் நிறுவனங்களால், வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக இழப்பீடு வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் - சிறுசேரி சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லுார் ஆகிய மூன்று வழித்தடங்களில் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில் இருந்த ஏராளமான கடைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவை, மாற்று தொழில் செய்ய இழப்பீடு வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:
ஒவ்வொரு வணிகர்களும், கடையின் வெளிப்புற அலங்காரத்திற்கு, லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளனர். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி நடக்கும் இடங்களில் இருந்த பல கடைகள் முழுதுமாக இடிக்கப்பட்டுள்ளன.
இதனால், அங்கு தொழில் செய்த வணிகர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளன. கடை வாடகைக்கு வழங்கிய டிபாசிட் தொகையை, கட்டட உரிமையாளர்கள், வணிகர்களுக்கு தர மறுக்கின்றனர்.
இதனால், மாற்று இடத்தில்கூட தொழில் துவங்க முடியவில்லை. எனவே, டிபாசிட் தொகையை வாங்கி தருவதுடன், கடை மற்றும் அலங்காரங்கள் இடிப்புக்கான இழப்பீட்டு தொகையை வணிகர்களுக்கு, அரசு வழங்க வேண்டும்.
இடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு அருகில், இடிக்கப்படாமல் உள்ள கட்டடங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கும் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளன.
அந்நிறுவனங்கள் தொழில், சொத்து வரியை, 50 சதவீத தள்ளுபடியில் செலுத்த அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.