UPDATED : ஜூலை 15, 2026 06:32 PM
ADDED : ஜூலை 15, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
பிராட்வே: வியாபாரிகளை மிரட்டி பணம் கேட்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
வடக்கு கோட்டை சாலையில் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என, மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நகர சிறு வியாபாரிகள் சங்கத்தினர் 35க்கும் மேற்பட்டோர், பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலையில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாரிமுனை, வடக்கு கோட்டை சாலையில் மொபைல் போன், துணி, ஜூஸ் என மொத்தம், 794 கடைகள் உள்ளன. இங்கு ஓராண்டாக சமூக விரோதிகள், கடையின் உரிமையாளர்களை மிரட்டி பணம் கேட்டு தொல்லை கொடுக்கின்றனர். புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, வியாபாரிகள் புகார் அளித்தனர்.
