ADDED : அக் 31, 2026 06:57 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில் இன்று நடைபெறும் மாரத்தான் போட்டியை முன்னிட்டு, முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் – 1’ சார்பில், 5வது சென்னை ரன்ஸ் மாரத்தான் போட்டி, இன்று காலை 4:15 மணிக்கு நேப்பியர் பாலத்தில் துவங்குகிறது. எம்.எல்.பார்க் சந்திப்பு வரை, 21 கி.மீ., 5 கி.மீ., 3 கி.மீ., என மூன்று பிரிவுகளாக போட்டி நடக்கிறது.
இதனால், காமராஜர் சாலை, டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் போட்டி நிறைவடையும் வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படும். போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
