/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.எச்., சாலையில் போக்குவரத்து மாற்றம்
/
டி.எச்., சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூலை 05, 2025 11:49 PM
சென்னை, :பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லுாரி முதல் டி.எச்., சாலை கல்லறை சந்திப்பு வரை, மழைநீர் வடிகால்வாய் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை முதல் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது.
மின்ட் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், டி.எச்., சாலை கல்லறை சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். பின், எம்.எஸ்., கோவில் தெரு, எஸ்.என்., சாலை மற்றும் ஜீவரத்தினம் சாலை வழியாக டி.எச்., சாலை அப்பல்லோ மருத்துவமனை வழியாக செல்லலாம்.
மின்ட் பகுதியில் இருந்து வரும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள், டி.எச்., சாலையை நோக்கிச் சென்று, வழக்கமான பாதையில் அப்பல்லோவை அடையலாம்.
டி.எச்., சாலை அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், டி.எச்., சாலை நோக்கிச் சென்று, வழக்கமான பாதையில் மின்ட் சந்திப்பை அடையலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.