/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி இன்று போக்குவரத்து மாற்றம்
/
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி இன்று போக்குவரத்து மாற்றம்
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி இன்று போக்குவரத்து மாற்றம்
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி இன்று போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 25, 2025 12:35 AM
சென்னை, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, இரண்டாவது டி - 20 கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக மைதானம் சுற்றியுள்ள பகுதியில், பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
l விக்டோரியா விடுதி சாலைக்கு செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். வாலாஜா சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை
l பாரதி சாலை ரத்னா கபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை, வாலாஜ சாலை வழியாக திருப்பி விடப்படும்
l பெல்ஸ் சாலையிலிருந்து கண்ணகி சிலை சாலை செல்ல அனுமதில்லை
l பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். பாரதி சாலையிலிருந்து பெல்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை வழியாக பெல்ஸ் சாலை செல்ல அனுமதியில்லை
l குடியரசு தின ஏற்பாட்டின் காரணமாக, நேப்பியர் பாலத்தில் இருந்து கண்ணகி சிலை வரை சாலைகள் மூடப்படும்.
வாகன நிறுத்தத்திற்கு அனுமதி வழங்கப்படாத வாகனங்கள், கலைவாணர் அரங்கம், ஓமந்துாரார் மருத்துவக்கல்லுாரி மைதானம், எம்.ஆர்.டி.எஸ்.சேப்பாக்கம், பொதுப்பணித்துறை மைதானம், சுவாமி சிவானந்தம் சாலை ஆகிய இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம்.