sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டி.எம்.எஸ்.,சில் வாகன நெரிசல் போக்குவரத்து மாற்ற திட்டம்

/

டி.எம்.எஸ்.,சில் வாகன நெரிசல் போக்குவரத்து மாற்ற திட்டம்

டி.எம்.எஸ்.,சில் வாகன நெரிசல் போக்குவரத்து மாற்ற திட்டம்

டி.எம்.எஸ்.,சில் வாகன நெரிசல் போக்குவரத்து மாற்ற திட்டம்


ADDED : ஜன 18, 2025 12:33 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, வாகன போக்குவரத்தில் சில மாற்றங்களை, போலீசார் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:

அண்ணா சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சிக்னல் இன்றி வாகனங்கள் எளிதாக கடந்து செல்லும்விதமாக, பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அண்ணா சாலை - ஜி.பி., சாலை சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக, எல்.ஐ.சி., அருகே 'யு - டர்ன்' வழங்கி போக்குவரத்து மாற்றப்பட்டது.

இந்நிலையில், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., - சிவசங்கரன் சாலை சந்திப்பில் உள்ள சிக்னலை மூடி, டி.எம்.எஸ்., பேருந்து நிறுத்தம் எதிரே 'யு - டர்ன்' வழங்க திட்டமிட்டு வருகிறோம்.

ஏற்கனவே நெரிசலை குறைக்கும் விதமாக, அண்ணா அறிவாலயம் அருகே உள்ள சிக்னலை மூடியதால், தற்போது வாகனங்கள் எளிதாக கடந்து செல்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us