/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேனாம்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் நீட்டிப்பு
/
தேனாம்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் நீட்டிப்பு
ADDED : ஏப் 25, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, நான்கு வழிச்சாலைக்கான மேம்பால கட்டுமான பணிகளை, நெடுஞ்சாலைத்துறையின் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக, 20ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலான மூன்று நாட்கள், சோதனை அடிப்படையில், ெஷனடாப் சாலை மற்றும் சேமியர்ஸ் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கட்டுமானப் பணி தொடர்வதால், கண்காணிப்புக்காக வரும் மே, 4ம் தேதி வரை, தற்போது உள்ள போக்குவரத்து மாற்றம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

