/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருந்தாளுநர் பணிக்கு கிண்டியில் பயிற்சி வகுப்பு
/
மருந்தாளுநர் பணிக்கு கிண்டியில் பயிற்சி வகுப்பு
ADDED : மே 17, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தால் நடத்தப்படவுள்ள மருந்தாளுநர் பணியிடத்திற்கான பயிற்சி வகுப்பு, 19ம் தேதி முதல் துவங்க உள்ளது.
கிண்டி, தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், வார நாட்களில் மட்டும் இப்பயிற்சி நடக்க உள்ளது.
பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்ப படிவ நகலுடன், கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக அணுகலாம்.
விபரங்களுக்கு, cgpecgc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.