/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதன்மை தேர்வுக்கு பயிற்சி
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதன்மை தேர்வுக்கு பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதன்மை தேர்வுக்கு பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதன்மை தேர்வுக்கு பயிற்சி
ADDED : ஆக 29, 2025 12:18 AM
சென்னை, 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்' என, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந்த கல்வியகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் -1 முதல் நிலை தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், எங்கள் கல்வியகத்தில் பயிற்சி பெற்ற, 67 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வு எழுதும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
எங்கள் கல்வியகத்தின் மாணவ - மாணவியர் மட்டுமின்றி, முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற இதர மாணவர்களும் எங்களின் கல்வியகத்தில், பயிற்சி பெற பதிவு செய்து கொள்ளலாம். புதிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.
இதற்கு www.mntfreeias.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2435 8373, 2433 0095, 98404 39393, 84284 31107 ஆகிய எண்களில் காலை 10:00 - மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.