ADDED : மார் 24, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :சென்னை கிண்டி, சிப்பெட் எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் இன்று, மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மண்புழுக்களின் வகைகள், அவற்றை சேகரிக்கும் வழிமுறைகள், உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்கள், வணிக ரீதியில் அவற்றை விற்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதேபோல் நாளை, விதவிதமான வற்றல், வடாம் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், ஜவ்வரிசி, இலை, தக்காளி, பூண்டு, உருளைக்கிழங்கு, புதினா, கொத்தமல்லி உள்ளிட்டவற்றில் இருந்து வடாம் தயாரிப்பது குறித்தும், வெண்டைக்காய், மணத்தக்காளி, சுண்டைக்காய், மோர் மிளகாய் வற்றல் தயாரிப்பு குறித்த பயிற்சிகளும் அளிக்கப்படும்.
பங்கேற்க விரும்புவோர், 044 - 2953 0048 என்ற தொலைபேசின எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.