/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜாம் வகைகள் தயாரிக்க வரும் 9ல் கிண்டியில் பயிற்சி
/
ஜாம் வகைகள் தயாரிக்க வரும் 9ல் கிண்டியில் பயிற்சி
ADDED : ஏப் 06, 2025 12:29 AM
சென்னை,
கிண்டி, சிப்பெட் கல்லுாரி எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பயிற்சி மையத்தில், வரும் 9ம் தேதி, மிக்ஸ்ட் ஜாம், மேங்கோ ஜாம், கேரட் ஜாம், பீட்ரூட் ஜாம் உள்ளட்ட ஜாம் வகைகள் தயாரிக்க, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திராட்சை, மேங்கோ, எலுமிச்சை, புதினா உள்ளிட்ட ஸ்வாஷ் மற்றும் நன்னாரி சிரப் தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
அதேபோல், வரும் 11ம் தேதி, இயற்கை வேளாண்மையில் கருத்துகள், கொள்கைகள், மண் வள மேலாண்மை, இயற்கை முறையில் ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்வது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், அங்கக, அதாவது இயற்கை வேளாண்மை காய்கறிகளுக்கான தரச்சான்றிதழ் பெறும் முறைகள், இடுபொருட்கள் தயாரிக்கும் முறையும் கற்பிக்கப்படுகிறது.
இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு, 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.