/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - கும்மிடி தடத்தில் ரயில்கள் தாமதம்: பயணியர் புகார்
/
சென்னை - கும்மிடி தடத்தில் ரயில்கள் தாமதம்: பயணியர் புகார்
சென்னை - கும்மிடி தடத்தில் ரயில்கள் தாமதம்: பயணியர் புகார்
சென்னை - கும்மிடி தடத்தில் ரயில்கள் தாமதம்: பயணியர் புகார்
ADDED : அக் 14, 2024 01:57 AM
சென்னை:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை தடத்தில் தினமும், 120க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
காலை, மாலை என, அலுவலக நேரங்களில் குறுகிய கதவுகளை உடைய 'மெமு' வகை ரயில்கள் இயக்குவதால், நிற்கக்கூட இடம் இல்லாமல் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், தினமும் 45 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
கும்மிடிப்பூண்டி மற்றும் சூலுார்பேட்டை தடத்தில், மின்சார ரயில்களை சீரான நேரத்தில் இயக்குவதில்லை.
விரைவு ரயில்கள் செல்லும் போதெல்லாம், பேசின்பிரிட்ஜ், திருவொற்றியூர், மீஞ்சூர், எண்ணுார் ஆகிய இடங்களில், மின்சார ரயில் திடீரென நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால், வேலைக்கு செல்வோர், விரைவு ரயில்களை பிடிக்க சென்ட்ரலுக்கு வருவோர், தினமும் அவதிப்படுகின்றனர்.
இந்த தடத்தில் கடைசி ரயில் இரவு, 11:20 மணிக்கே நிறுத்தப்படுகிறது. முன்பு, நள்ளிரவு, 12:15 மணிக்கு கடைசி ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில், அத்திப்பட்டு வரையில் உள்ள நான்கு வழிப்பாதைகளை, கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க உள்ளோம்.
இந்த திட்டப்பணிகளை படிப்படியாக முடிக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரயில் சேவை துவக்கம்
சென்னையை அடுத்துள்ள கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்திற்குப் பின், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய மின்சார ரயில் சேவை, மீஞ்சூருடன் நிறுத்தப்பட்டது.
கவரைப்பேட்டையில் பராமரிப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை 8:40 முதல் கும்மிடிப்பூண்டி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.