/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்மாற்றி தீ பிடித்து பைக் நாசம்
/
மின்மாற்றி தீ பிடித்து பைக் நாசம்
ADDED : மே 07, 2025 11:58 PM
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, சாரதி தெருவில் உள்ள ஒரு மின்மாற்றி, நேற்று அதிகாலை 2:30 மணிக்கு வெடித்து, தீக்கனல் தெறித்தது.
அந்த தீ, அருகில் அடுக்கி வைத்திருந்த சென்டரிங் பலகையில் பற்றியது. அதிகாலை என்பதால், அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. அதனால், பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
மின் மாற்றியில், தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதில், அருகில் நிறுத்தியிருந்த இக்பால், 35, என்பவரின் ஹோண்டா இருசக்கர வாகனம் எரிந்து நாசமானது.
அடுத்த சில நிமிடங்களில், அக்கம் பக்கத்தினர் அதை கண்டு, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தேனாம்பேட்டை தீயணைப்பு படையினர், தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து, சைதாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.