/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநங்கையர் 'அரண்' விடுதி டி.பி.சத்திரத்தில் திறப்பு
/
திருநங்கையர் 'அரண்' விடுதி டி.பி.சத்திரத்தில் திறப்பு
திருநங்கையர் 'அரண்' விடுதி டி.பி.சத்திரத்தில் திறப்பு
திருநங்கையர் 'அரண்' விடுதி டி.பி.சத்திரத்தில் திறப்பு
ADDED : அக் 14, 2025 01:20 AM

டி.பி.சத்திரம்,
'அரண்' எனும் பெயரில், திருநங்கையர் தங்கும் விடுதி, டி.பி.,சத்திரத்தில் நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
சமூக நலத்துறை, சென்னை மாவட்டம் சார்பில், திருநங்கையர், திருநம்பிகளுக்கான 'அரண்' என்ற பெயரில் தங்கும் விடுதிகள், அண்ணா நகர் மண்டலம், 100வது வார்டு டி.பி.சத்திரம், வி.எஸ்., புரம் முதல் தெருவில், 'தோழி' அமைப்பு ஆதரவில், நேற்று திறக்கப்பட்டது. இந்த விடுதி பராமரிப்புக்கு ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
'தோழி' அமைப்பினர் கூறுகையில், 'மொத்தம் 2,400 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் முதல் தளத்தில் 25 பேர் தங்கும் அளவில், விடுதி உள்ளது. இங்கு, உணவு தயாரிப்புக்கு, அலுவலக பணிக்கு தனித்தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, ஆறு பேர் விடுதியில் சேர்ந்துள்ளனர்' என்றனர்.