ADDED : ஆக 23, 2025 12:37 AM
வானகரம், தனியார் நிறுவன மேலாளரை வெட்டிய வழக்கில், திருநங்கை உட்பட ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர்.
மது ரவாயல் அடுத்த வானகரம், ஜனனி நகரில் வசிப்பவர் அஜித்குமார், 30; தனியார் போக்கு வரத்து நிறுவன மேலாளர். இவர், நேற்று முன்தினம், அதே பகுதியில் நடந்து சென்ற போது மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி தப்பினர்.
வானகரம் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை ரீட்டா, 30, அவரது காதலன் விஷ்ணு, 25, அவரது நண்பர்களான குமார், 26, சூர்யா, 24, பிரசாந்த், 28, பிரவீன், 23, மணி, 21, ஆகிய ஏழு பேரை, கைது செய்தனர்.
அஜித்குமாரும், திருநங்கை ரீட்டாவும் கணவன், மனைவி போல் வாழ்ந்ததாக தெரி கிறது. அஜித்குமாருக்கு திருமணம் செய்ய இருப்பதால், திருநங்கை ரீட்டாவிடம் பழகுவதை தவிர்த்துள்ளார்.
அதனால் ரீட்டா, அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவருடன் பழகி வந்தார். இதற்கிடையில் அஜித்குமார் மீண்டும், ரீட்டாவுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரீட்டா மற்றும் விஷ்ணு, நண்பர்களுடன் சேர்ந்து அஜித்குமாரை வெட்டியது தெரியவந்தது.

