/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
/
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
ADDED : அக் 15, 2025 02:10 AM
சென்னை, தீபாவளியையொட்டி, நெரிசல் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, ஆம்னி பேருந்துகள் விதிமீறல் உட்பட, பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி, நேற்று ஆலோசனை நடத்தினார்.
தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்படும் வாகன நெரிசலை சமாளிப்பது, மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், தாம்பரம் மாநகரா ட்சி ஆணையர், போலீஸ் உயர் அதிகாரிகள், கிளாம்பாக்கம் பேருந்து முனைய அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து, தீபாவளியையொட்டி, கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வாயிலாக நடவடிக்கை எடுக்கக்கோரி, போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தினார்.
இணையதளம் வாயிலாக எடுக்கப்பட்ட தகவலில், 12 ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் வசூலித்து வருவதாகவும், அவர்கள் கட்டணத்தை குறைக்காவிட் டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவு ம், போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி எச்சரித்தார்.