/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் போக்குவரத்து அமைச்சர் உறுதி
/
நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் போக்குவரத்து அமைச்சர் உறுதி
நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் போக்குவரத்து அமைச்சர் உறுதி
நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் போக்குவரத்து அமைச்சர் உறுதி
ADDED : மார் 29, 2025 03:17 AM
சென்னை:''நிறுத்தப்பட்ட வழித்தடங்களில், ஜூன் மாதம் புதிய பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
தி.மு.க., - கருணாநிதி: கே.கே.நகரில் இருந்து வள்ளலார் நகருக்கு மாநகர பேருந்து இயக்கப்பட்டது. இதன் வாயிலாக, வள்ளலார் நகர் அருகில் உள்ள ஸ்டான்லி, ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனைகளுக்கு மக்கள் சென்றுவந்தனர். இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவது நிறுத்தப்பட்டு உள்ளது; மீண்டும் இயக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: குறைவான பயணியர் எண்ணிக்கை காரணமாக, அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. வள்ளலார்நகர் - பூந்தமல்லி இடையிலான பேருந்துகளை, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
கருணாநிதி: தியாகராய நகரில் இருந்து செங்கல்பட்டிற்கு முன் பேருந்துகள் இயக்கப்பட்டன. இது தற்போது சைதாப்பேட்டையில் இருந்து இயக்கப்படுகிறது. பொதுமக்கள், சிறுவியாபாரிகள் பயன்படுத்த ஏதுவாக மீண்டும் தியாகராய நகரில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: கோரிக்கை நியாயமானது; சைதாப்பேட்டையில் இருந்து அந்த பேருந்துகளை மாற்றக்கூடாது; தொடர்ந்து இயக்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஜூன் மாதம் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. எண்ணுாரில் அவை தயாராகி வருவதை நேரில் ஆய்வுசெய்யும் பாக்கியம் கிடைத்தது. புதிய பேருந்துகள் வந்ததும், நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.