/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹெராயின் வைத்திருந்த திரிபுரா நபர்கள் கைது
/
ஹெராயின் வைத்திருந்த திரிபுரா நபர்கள் கைது
ADDED : மார் 26, 2025 12:15 AM
சென்னை, அபிராமபுரம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சிவாஜி மணிமண்டபம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
தொடர்ந்து அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, 3 கிராம் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்தது தெரிந்தது.
காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், தரமணியை சேர்ந்த சோஹக் மியா, 24, காரப்பாக்கத்தைச் சேர்ந்த அப்துல் மியா, 24 என்பது தெரிந்தது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் என்பதும், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 3 கிராம் ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.