/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் கஞ்சா கடத்திய திரிபுரா 'குருவி'க்கு கம்பி
/
ரயிலில் கஞ்சா கடத்திய திரிபுரா 'குருவி'க்கு கம்பி
ADDED : செப் 29, 2025 12:00 AM
அண்ணா நகர்:திரிபுரா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி, 'குருவி' போல செயல்பட்டு, சென்னை வியாபாரிகளுக்கு சப்ளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
வடமாநிலத்தில் இருந்து, ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெரம்பூர் ரயில் நிலையத்தின் வெளியில், போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து சோதித்தபோது, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப், 29, என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், திரிபுரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி, குருவி போல் செயல்பட்டு, சென்னையில் உள்ள வியாபாரிகளுக்கு விற்றது தெரிந்தது. இவரது அடையாளங்களை வைத்து, வியாபாரிகள் கஞ்சாவை வாங்கி சென்னை முழுதும் விற்றுள்ளனர்.
இவரிடம் கஞ்சா வாங்கும் வியாபாரிகள் குறித்து, போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.