/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரிசூலத்தில் கஞ்சா விற்ற திரிபுரா பெண் கைது
/
திரிசூலத்தில் கஞ்சா விற்ற திரிபுரா பெண் கைது
ADDED : மார் 21, 2025 12:25 AM
பல்லாவரம், பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் ரயில்வே கேட் அருகே, நேற்று முன்தினம், பல்லாவரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில், கையில் பையுடன் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
அதில், திரிபுரா, உதய்ப்பூரை சேர்ந்த பாயல் தாஸ், 25, என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அதில் மூன்று கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவருக்கு திருமணமாகி, கணவர் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், மாதத்திற்கு நான்கு முறை திரிபுராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, இன்ஸ்டாகிராம் நண்பர்கள் வாயிலாக வடமாநில தொழிலாளர்களுக்கு விற்று வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.