/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹெராயின் கடத்திய திரிபுரா வாலிபர்கள் கைது
/
ஹெராயின் கடத்திய திரிபுரா வாலிபர்கள் கைது
ADDED : ஏப் 10, 2025 11:44 PM
தரமணி, தரமணி, சி.எஸ்.ஐ.ஆர்., சாலையில், சந்தேகப்படும் வகையில் நின்ற நபர்களிடம், தரமணி ரோந்து போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 2 கிராம் ஹெராயின் இருந்தது.
தீவிர விசாரணையில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அனோர்ஹொசைன், 27, அஜய்குமார், 30, ரீமன்தெபர்மா, 18, முகமது ஜேசிம்யா, 23, தஜ்ருல் ஹுசைன், 22, என தெரிந்தது.
இவர்கள், சென்னையில் ஹோட்டல், கட்டுமான பணி செய்து கொண்டே, அடிக்கடி திரிபுரா சென்று ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்தது தெரிந்தது.
நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ஹெராயினை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.