/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனுமதியின்றி பந்தல் அமைப்பு த.வெ.க., - போலீசார் தள்ளுமுள்ளு
/
அனுமதியின்றி பந்தல் அமைப்பு த.வெ.க., - போலீசார் தள்ளுமுள்ளு
அனுமதியின்றி பந்தல் அமைப்பு த.வெ.க., - போலீசார் தள்ளுமுள்ளு
அனுமதியின்றி பந்தல் அமைப்பு த.வெ.க., - போலீசார் தள்ளுமுள்ளு
ADDED : நவ 29, 2025 03:19 AM

அம்பத்துார்: துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில், அனுமதியின்றி பந்தல் அமைத்த த.வெ.க.,வினருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
துாய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அம்பத்துார் தொழிற்பேட்டை அருகே, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 70க்கும் மேற்பட்ட த.வெ.க.,வினர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியின்றி, த.வெ.க.,வினர் பந்தல் அமைக்க முயன்றனர். அங்கு வந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், த.வெ.க.,வினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளானது.
இதையடுத்து அக்கட்சியினர், போலீசாரிடம் அனுமதி வாங்கினர். தொடர்ந்து, அங்கு பந்தல் அமைத்து, அதனுள் அமர்ந்து தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பின், பந்தலில் இருந்து வெளியே வந்து, சாலையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசார், 'பந்தலினுள் இருந்து ஆர்ப்பாட்டம் நடத்தவே அனுமதி வாங்கியுள்ளீர்கள். மக்களுக்கு இடையூறாக சாலையில் போராட்டம் நடத்தக்கூடாது' என எச்சரிக்கை விடுத்தனர். த.வெ.க.,வினர், மொத்தமாக 10 நிமிடங்கள் மட்டும் கோஷம் எழுப்பிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

