/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவகத்தில் தகராறு த.வெ.க., பிரமுகர், ரவுடி கைது
/
உணவகத்தில் தகராறு த.வெ.க., பிரமுகர், ரவுடி கைது
ADDED : ஆக 11, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தள்ளுவண்டியில் உணவம் நடத்தி வருபவரிடம், குடிபோதையில் தகராறு செய்த ரவுடி மற்றும் த.வெ.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா நகர், மேற்கு பாடி புதுநகரில், தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருபவர் மணிகண்டன், 35. இவரது கடைக்கு நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி முத்துகுமார் மற்றும் நடிகர் விஜய் கட்சியான, த.வெ.க., பிரமுகர்கள் முருகன், பாலாஜி ஆகியோர், குடிபோதையில் தகராறு செய்துள்ளனர். மணிகண்டனின் சட்டையை கிழித்து தாக்கி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, ஜெ.ஜெ., நகர் போலீசார், முத்துகுமார், முருகன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாலாஜியை தேடி வருகின்றனர்.