/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி ஓட்டுனருக்கு வலிப்பு 12 வாகனங்கள் மீது மோதல்
/
லாரி ஓட்டுனருக்கு வலிப்பு 12 வாகனங்கள் மீது மோதல்
ADDED : பிப் 15, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், கண்டெய்னர் லாரி ஓட்டுனர் சசிகுமார், 32. நேற்று இவர், சென்னை விமான நிலையத்திலிருந்து இருங்காட்டுக்கோட்டைக்கு கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றார்.
தாம்பரம் அருகே சென்ற போது, சசிகுமாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் தறிகெட்டுச் சென்ற லாரி, தீயணைப்பு பயிற்சி வாகனம், ஆறு ஆட்டோக்கள், ஐந்து டூ-வீலர்கள் என 12 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் இருசம்மாள், தீயணைப்பு நிலை அலுவலர் இளஞ்செழியன் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

