/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மிளகாய் பொடி துாவி செயின் பறிக்க முயற்சி
/
மிளகாய் பொடி துாவி செயின் பறிக்க முயற்சி
ADDED : ஆக 29, 2025 12:20 AM

முகப்பேர், வேலைக்கு அழைத்ததாக பேச்சு கொடுத்தப்படி, முதியவரின் கண்களில் மிளகாய்பொடி துாவி, செயின் பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
முகப்பேர், ட்ரினிட்டி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார், 62. இவரது வீட்டிற்கு, நேற்று மதியம் 1:45 மணியளவில் வந்த, பெண் ஒருவர், தன்னை வீட்டு வேலைக்கு அழைத்ததாக கூறி பேச்சு கொடுத்துள்ளார்.
அதற்கு சுகுமார், 'நாங்கள் அப்படி யாரையும் அழைக்கவில்லை' எனக் கூறியுள்ளார். அப்பெண் பேச்சு கொடுத்தபடியே, தான் வைத்திருந்த பையில் இருந்து மிளகாய் பொடியை எடுத்து, சுகுமாரின் முகத்தில் வீசியுள்ளார்.
பின், சுகுமார் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். சுகுமாரின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அவரது உறவினர்கள், அப்பெண்ணை பிடித்து ஜெ.ஜெ.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த மல்லிகா, 50, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.