/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவனுக்கு 'தொல்லை' டியூஷன் ஆசிரியர் கைது
/
மாணவனுக்கு 'தொல்லை' டியூஷன் ஆசிரியர் கைது
ADDED : ஆக 17, 2025 12:54 AM
எம்.கே.பி.நகர், மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூஷன் ஆசிரியர் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.
கொடுங்கையூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபராஜ், 41, என்பவரிடம், மூன்று ஆண்டுகளாக டியூஷன் படித்து வருகிறார்.
ஜெபராஜ், மாணவனுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை டியூஷன் வந்த மாணவனை, தனியாக அழைத்து சென்று, ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவன், பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்த நிலையில், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், ஜெபராஜை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

