/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூரை மீன்பிடி துறைமுகம் அடுத்த மாதம் திறப்பு
/
சூரை மீன்பிடி துறைமுகம் அடுத்த மாதம் திறப்பு
UPDATED : நவ 21, 2024 05:17 AM
ADDED : நவ 21, 2024 12:38 AM

திருவொற்றியூர்: சென்னை, திருவொற்றியூர் குப்பத்தில், 68 ஏக்கரில், சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி, 2019ல், 272 கோடி ரூபாயில் துவங்கப்பட்டது. தற்போது, 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இப்பணிகளை, வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏக்கள்., மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 'துாண்டில் வளைவு நீளம் குறைவாக உள்ளது. மழை, புயல் காலங்களில், மீனவர்களின் உயிருக்கு அபாயம் உள்ளதால், துாண்டில் வளைவை, 100 மீட்டர் வரை விரிவாக்க வேண்டும்' என, அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதை கேட்டுக் கொண்ட மீன்வளத்துறை அதிகாரிகள், அடுத்த மாதத்திற்குள் பணிகள் முடிந்து, மீன்பிடி துறைமுகம் திறக்கப்படும் என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
துறைமுகம் பயன்பாட்டிற்கு வந்தால், ஆண்டுக்கு, 60,000 டன் மீன்கள் கையாள முடியும். குறிப்பாக, காசிமேடு மீன் பிடித்துறைமுகத்தில், இடப்பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இதைத்தொடர்ந்து, திருவொற்றியூர் அண்ணாமலை நகர், விம்கோ நகரில் நடக்கும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளையும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆய்வு செய்தனர்.
பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

