/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் மீது கார் மோதி விபத்து 'டிவி' கேமராமேன் உயிரிழப்பு
/
பைக் மீது கார் மோதி விபத்து 'டிவி' கேமராமேன் உயிரிழப்பு
பைக் மீது கார் மோதி விபத்து 'டிவி' கேமராமேன் உயிரிழப்பு
பைக் மீது கார் மோதி விபத்து 'டிவி' கேமராமேன் உயிரிழப்பு
ADDED : நவ 21, 2024 12:17 AM

போரூர்,
மதுரவாயல் அருகே பைக் மீது, பி.எம்.டபிள்யூ., சொகுசு கார் மோதிய விபத்தில், தனியார் தொலைக்காட்சி கேமரா மேன், மேம்பாலத்தில் இருந்து துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை பாண்டி பஜார் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பிரதீப் குமார், 39; தெலுங்கு, 'டிவி' ஒளிப்பதிவாளர். பகுதி நேரமாக பைக் டாக்சி ஊழியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை 2:00 மணி அளவில், மதுரவாயல் -- தாம்பரம் பைபாஸ் சாலையில் தன், டி.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
மதுரவாயல் ஓடமா நகர் அருகே சென்றபோது, பின் வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார், அவரது பைக் மீது மோதியது.
பைபாஸ் மேம்பாலத்தில் இருந்து துாக்கி வீசப்பட்ட பிரதீப்குமார், கீழே உள்ள சர்வீஸ் சாலையோரம் உள்ள புதரில் விழுந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
விபத்தில், பிரதீப்குமாரின் கால் துண்டானது. மேலும், பி.எம்.டபிள்யூ., காரின் முன்பகுதி சேதமடைந்ததால், அதன் சென்சார் துண்டிக்கப்பட்டு, 1 கி.மீ., துாரம் சென்று தானாகவே நின்றது.
இதையடுத்து, காரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார், ஒரு மணி நேர தேடலுக்குப்பின், பிரதீப் குமாரின் சடலத்தை மீட்டனர்.
விபத்து குறித்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வேலப்பன்சாவடியில் உள்ள சிமென்ட் கலவை தயார் செய்யும் தனியார் நிறுவன கார் ஓட்டுனர் முரளி, 33, விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
வேலை நிமித்தமாக சென்னை விமான நிலையத்தில் ஒருவரை இறக்கி விட்டு திரும்பியபோது, விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தப்பி ஓடிய முரளியை, போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சி அடையாள அட்டை

