/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேக்கரி ஊழியரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது
/
பேக்கரி ஊழியரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது
ADDED : ஆக 21, 2025 01:08 AM
செம்மஞ்சேரி, பேக்கரி ஊழியரை தாக்கி பணம் பறித்த இரண்டு வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
செம்மஞ்சேரி, சுனாமி நகரில் ஒரு பேக்கரி உள்ளது. நேற்று முன்தினம் இரவு, ஊழியர் அருண், 28, என்பவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
வாடிக்கையாளர்கள் இல்லாதபோது, இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி, அருணை சரமாரியாக தாக்கினர். பின், கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி வழக்குபதிந்த செம்மஞ்சேரி போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், செம்மஞ்சேரியை சேர்ந்த அஜித்குமார், 25, பாபுகான், 28, ஆகியோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
நேற்று, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

