/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பார்' மேலாளரை தாக்கிய இருவர் கைது போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
/
'பார்' மேலாளரை தாக்கிய இருவர் கைது போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
'பார்' மேலாளரை தாக்கிய இருவர் கைது போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
'பார்' மேலாளரை தாக்கிய இருவர் கைது போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 25, 2025 11:58 PM

சென்னை,மதுபோதையில், தனியார் ஹோட்டல் மதுக்கூட மேலாளரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களை, மதுக்கூடத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
நுங்கம்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்து பிரிவில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஹரிபுத்திரன், 52.
இவர், மலேஷியாவில் இருந்து வந்த நண்பர்கள் முகமது அஸ்வான், 33, பாபு ஆரோக்கியநாதன், 40, ஆகிய இருவரையும், நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் மதுக்கூடத்திற்கு நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்றார்.
அங்குள்ள, மதுக்கூட மேலாளர் தருண்குமாரிடம், சிறப்பு உதவி ஆய்வாளர் என, தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஹரிபுத்திரன், நண்பர்களுடன் மது அருந்தினார்.
அப்போது, நண்பர்களில் ஒருவர் மது போதையில், அங்கிருந்த பெண்களிடம் கைகுலுக்கி, 'சந்தோஷம் பொங்குதே' என, பாட்டு பாடியதால் பிரச்னை ஏற்பட்டது.
மதுக்கூட மேலாளரிடம் பெண்கள் புகார் அளித்ததால், ஹரிபுத்திரன் உட்பட மூவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் நண்பர்கள், மதுக்கூட மேலாளர் தருண்குமாரை தாக்கினர். இதில், காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அஸ்வான், 33, எழும்பூரைச் சேர்ந்த பாபு ஆரோக்கியநாதன், 40, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ஹரிபுத்திரன், 52, பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

