sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பனிப்புயல் கோரதாண்டவம்; நியூயார்க்கில் அவசரநிலை

/

பனிப்புயல் கோரதாண்டவம்; நியூயார்க்கில் அவசரநிலை

பனிப்புயல் கோரதாண்டவம்; நியூயார்க்கில் அவசரநிலை

பனிப்புயல் கோரதாண்டவம்; நியூயார்க்கில் அவசரநிலை

6


UPDATED : பிப் 24, 2026 04:06 PM

ADDED : பிப் 24, 2026 07:47 AM

Google News

6

UPDATED : பிப் 24, 2026 04:06 PM ADDED : பிப் 24, 2026 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், 150 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், நியூயார்க் உட்பட வடகிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பனிப்புயல் வீசத் துவங்கியது. இதை கணித்த அந்நாட்டு தேசிய வானிலை மையம், கடுமையான காற்றுடன் அதிக பனியைக் கொட்டும் புயலுக்கான 'ப்ளிசார்டு' எச்சரிக்கையை, ஒன்பது ஆண்டுக்குப் பின் விடுத்தது.

பனிப்புயலின் தாக்கத்தால் பல இடங்களில் 3 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது. இதையடுத்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் நியூயார்க் மேயர் மம்தானி தடை விதித்துள்ளார். கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுதால், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 10,000க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை, நேற்று ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா முழுதும் 13,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகர பள்ளிகள் முழுதும் மூடப்பட்டன. மரங்கள் விழுந்து மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதால், வடகிழக்கு அமெரிக்காவில், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பா ஸ்டன், கனெக்டிகட், டெலாவெர், மேரிலேன்ட், விர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது, வடகிழக்கு அமெரிக்காவை 150 ஆண்டுகளில் இல்லா த அளவு தாக்கிய பனிப்புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us