sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தொடர்கிறது குண்டுமழை; இன்று 5வது ஆண்டில் உக்ரைன்-ரஷ்யா போர்

/

தொடர்கிறது குண்டுமழை; இன்று 5வது ஆண்டில் உக்ரைன்-ரஷ்யா போர்

தொடர்கிறது குண்டுமழை; இன்று 5வது ஆண்டில் உக்ரைன்-ரஷ்யா போர்

தொடர்கிறது குண்டுமழை; இன்று 5வது ஆண்டில் உக்ரைன்-ரஷ்யா போர்

8


UPDATED : பிப் 24, 2026 10:45 PM

ADDED : பிப் 24, 2026 07:13 AM

Google News

8

UPDATED : பிப் 24, 2026 10:45 PM ADDED : பிப் 24, 2026 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்: ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையேயான போர் மூண்டு 4 ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இன்று (பிப்.24) 5வது ஆண்டில் இந்த போர் அடியெடுத்து வைக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடம், உடமைகள் உள்ளிட்டவற்றை இழந்து, இடம்பெயர்ந்துள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் முயற்சிகள் தொடர்ந்தாலும் அதற்கான நிரந்தர தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை. கிட்டத்தட்ட இந்த போர் 4வது ஆண்டை நிறைவு செய்து இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;

உக்ரைனை ஆதரிப்பதில் அமெரிக்கா சக்திவாய்ந்த ஒன்றாகவும், அதில் இருந்து பின்வாங்க முடியாத அளவுக்கும் இருக்கிறது. அதிபர் டிரம்ப், உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவை தொடர்ந்து உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்கமுடியாது. ரஷ்யா விரும்பும் அனைத்தையும் தரமுடியாது. போருக்கு புடின் என்ற ஒரு நபரே முக்கிய காரணம்.

இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்புகளை ரஷ்யா தன்னகத்தே கைப்பற்றி உள்ளது. நிலப்பரப்புகள் கையகப்படுத்துவதல், அதிகரிக்கும் உயிரிழப்புகள், உள்கட்டமைப்புகள் சேதம் உள்ளிட்டவை உலகநாடுகள் இடையே கவலையையும் ஏற்படுத்தி உள்ளது, குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us