/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இருவர் கைது
/
டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இருவர் கைது
ADDED : நவ 07, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்: சேலைவாயல், துர்கை அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன், 47. கொடுங்கையூர், ஆர்.வி., நகரில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளர். கடந்த 3ம் தேதி, டாஸ்மாக் கடையில் வேலையில் இருந்தபோது, அங்கு வந்த இருவர், பணம் கொடுக்காமல் மது கேட்டுள்ளனர்.
தர மறுக்கவே, பீர் பாட்டிலால் கண்ணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். காயமடைந்த கண்ணன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் தொடர்புடைய, கொடுங்கையூர், நாராயணசாமி கார்டனை சேர்ந்த அனிஷ், 31, மூலக்கடையைச் சேர்ந்த டேவிட், 33, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.

