/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய இருவர் கைது
/
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய இருவர் கைது
ADDED : மார் 19, 2025 12:21 AM
மாம்பலம், தி.நகர், கண்ணம்மாபேட்டை ரயில்வே பார்டர் சாலையைச் சேர்ந்தவர் முகுந்தன், 24. இவர், கடந்த 16ம் தேதி இரவு, தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
அங்கு வந்த ஜெயகுமார் மற்றும் கவுதம் ஆகியோர், முகுந்தனை தகாத வார்த்தைகளால் பேசி, பீர்பாட்டிலால் அவரை தாக்கினர்.
இதில், தலையில் காயமடைந்த முகுந்தன், சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மாம்பலம் போலீசார் விசாரித்து தி.நகரைச் சேர்ந்த ஜெயகுமார், 27, கவுதம், 28, ஆகிய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில், ஓராண்டிற்கு முன், முகுந்தன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, ஜெயகுமார், அவரது நண்பர் முகமது ரியாஸ் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில், முகுந்தன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தார்.
இதற்கு பழிவாங்க, முகுந்தனை அவர்கள் தாக்கியது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.