/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலில் புகுந்து திருடிய இருவர் கைது
/
கோவிலில் புகுந்து திருடிய இருவர் கைது
ADDED : ஏப் 01, 2025 01:10 AM
புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, அன்னை இந்திரா காந்தி நகரில் நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் பூசாரி ராதாகிருஷ்ணன், நேற்று கோவிலை திறந்து வைத்து, பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார்.
அப்போது, மர்ம நபர்கள் இருவர் கோவிலில் இருந்து ஓடுவதை பார்த்து, யார் எனக் கேட்டுக் கொண்டே, அவர்களை துரத்திச் சென்று பகுதிவாசிகள் உதவியுடன் பிடித்தார்.
இதில், 3 கிலோ எடையிலான கோவிலில் உள்ள பித்தளை மணி, பித்தளை கற்பூர ஆரத்தி உள்ளிட்டவற்றை திருடி கொண்டு தப்ப முயன்றது தெரிய வந்தது. கோவில் நிர்வாகி சந்தனகுமார், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த நாகூர் மீரான், 36, முசாபர் ஹனி, 36, என்பதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

