/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கி அதிகாரியிடம் ஆசைகாட்டி மோசடி செய்த இருவர் கைது
/
வங்கி அதிகாரியிடம் ஆசைகாட்டி மோசடி செய்த இருவர் கைது
வங்கி அதிகாரியிடம் ஆசைகாட்டி மோசடி செய்த இருவர் கைது
வங்கி அதிகாரியிடம் ஆசைகாட்டி மோசடி செய்த இருவர் கைது
ADDED : ஜூலை 13, 2025 12:14 AM

சென்னை :தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, வங்கி மண்டல மேலாளரிடம் பணம் பெற்று மோசடி செய்த இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன், 58. பஞ்சாப் நேஷனல் வங்கி மண்டல மேலாளரான இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்:
தங்கத்தில் முதலீடு செய்தால், நல்ல லாபம் பெற்றுத் தருவதாக கூறி, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, 42, ராமாபுரத்தைச் சேர்ந்த சுபாஷ், 31 உட்பட சிலர் ஆசை வார்த்தை கூறினர்.
பின் தன்னிடம் இருந்த, 57 லட்சம் ரூபாய், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பெற்றுக்கொண்டனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி லாபத்தையும் கொடுக்கவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை.
மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணம், நகையை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வழக்கு பதிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட மகேஸ்வரி, சுபாஷ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களின் இரண்டு வங்கி கணக்குகளையும் முடக்கினர்.