/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிலம் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.4.62 கோடி ஏமாற்றிய இருவர் கைது

ADDED : மார் 13, 2026 04:27 AM
தாம்பரம்: நிலம் வாங்கி தருவதாக கூறி, தொழிலதிபர் ஒருவரிடம், 4.62 கோடி ரூபாயை ஏமாற்றிய இருவரை, தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அடையாறு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம், சிங்கபெருமாள் கோவிலை அடுத்த, அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், அடையாறு பகுதியை சேர்ந்த ரகுபதி ஆகியோர், மறைமலை நகர் தாலுகாவில் உள்ள கருநிலம் மற்றும் அனுமந்தபுரம் கிராமங்களில், 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளதாக கூறியுள்ளனர்.
பின், பல்வேறு நில உரிமையாளர்களிடம் இருந்து, நிலத்தை கிரையம் பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறி, 2023, ஜூன் மற்றும் 2024, ஏப்ரல் ஆகிய மாதங்களில், இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, இருவரின் பல்வேறு வங்கி கணக்குகளில், 4.62 கோடி ரூபாய் பெற்றுள்ளனர்.
பின், நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளனர். ஏமாற்றம் அடைந்த அந்த தொழிலதிபர், இது குறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின்படி, தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி, ஹரிகிருஷ்ணன், 56, ரகுபதி, 59, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.