/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொடுத்த பணத்தை வசூலிக்க லாரியை கடத்திய இருவர் கைது
/
கொடுத்த பணத்தை வசூலிக்க லாரியை கடத்திய இருவர் கைது
கொடுத்த பணத்தை வசூலிக்க லாரியை கடத்திய இருவர் கைது
கொடுத்த பணத்தை வசூலிக்க லாரியை கடத்திய இருவர் கைது
UPDATED : மார் 16, 2025 01:39 AM
ADDED : மார் 16, 2025 12:12 AM

சென்னை:ராமாபுரம், மைக்கேல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராணி, 38. இவரது கணவர், சொந்தமாக கழிவுநீர் அகற்றும் லாரி வைத்து, தொழில் செய்து வந்தநிலையில், கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன், கும்பகோணத்தில் உள்ள தாயை காண செல்வராணி சென்றார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, ஸ்டார்ட் செய்யப்பட்டுள்ளது குறித்து, மொபைல் போனில் ஜி.பி.எஸ்., வாயிலாக தெரிந்தது.
உடனே, லாரி ஓட்டுனரை தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, அவசர உதவி 100க்கு தொடர்பு கொண்ட அவர், லாரியை மர்மநபர்கள் திருடியது குறித்து தகவல் தெரிவித்தார்.
பின், ஜி.பி.எஸ்., கருவியின் சிக்னலை பயன்படுத்தி, மயிலம் அருகே லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். லாரி கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரித்ததில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார், 43, சிதம்பரநாதன், 36, என்பதும், செல்வராணியின் கணவருக்கு கொடுத்த பணத்திற்காக, லாரியை கடத்தியதும் தெரியவந்தது.
நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.