/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடமானம் வைத்த காரை திரும்ப தராத இருவர் கைது
/
அடமானம் வைத்த காரை திரும்ப தராத இருவர் கைது
ADDED : அக் 03, 2025 12:29 AM

கோயம்பேடு, அடமானம் வைத்த காரை திரும்ப தராமல் மிரட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
வளசரவாக்கம், அன்பு நகரைச் சேர்ந்தவர் வசந்த பிரியன், 36. இவரது மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., காரை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த கலீல் ரகுமான், 38, மற்றும் அவரது நண்பர் மதுரவாயலைச் சேர்ந்த உமேஷ் ஆகியோரிடம், 5 லட்சம் ரூபாய் கடன் பேசி, அடமானம் வைத்துள்ளார். முதலில், 2 லட்சம் ரூபாய் கொடுத்தவர்கள், மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வசந்த பிரியன் கடனாக வாங்கிய 2 லட்சம் ரூபாய்க்கு வட்டியும் சேர்த்து கொடுத்து, காரை திரும்ப கேட்டுள்ளார். ஆனால், காரை திரும்ப தராமல், இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர்.
இது குறித்து, கோயம்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், இதேபோல் பலரிடம் கார்களை அடமானத்திற்கு வாங்கி, மேல் அடமானத்திற்கு வைத்ததும், வட்டி கட்ட முடியாதோரின் கார்களை மிரட்டி எழுதி வாங்கியதும் தெரிய வந்தது.
அதேபோல், வசந்த பிரியனின் காரையும் மற்றொருவரிடம் அடமானமாக வைத்துள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து, காரை பறிமுதல் செய்த போலீசார், உமேஷ் மற்றும் கலீல் ரகுமானை கைது செய்தனர்.