/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோ க்கைன் வைத்திருந்த இருவர் கைது
/
கோ க்கைன் வைத்திருந்த இருவர் கைது
ADDED : ஜன 28, 2025 12:58 AM
சென்னை, சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் அண்ணா நெடும்பாதையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து, அவர்களை சோதனை செய்தபோது, 3.93 கிராம் எடையிலான கோக்கைன் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
பின், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், ராயப்பேட்டையைச் சேர்ந்த பயாஸ் அகமது, 31, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், 35, என்பது தெரியவந்தது.
நேற்று, இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கோக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.