/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இருவர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இருவர் கைது
ADDED : மே 16, 2025 12:22 AM
கோயம்பேடு:சென்னை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் கோயம்பேடு போலீசார் இணைந்து, கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, வசந்த பவன் ஹோட்டல் அருகே, கே.டி.எம்., டியூக் பைக்குடன் நின்றிருந்த இருவரை அழைத்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவர்களை சோதனை செய்தனர். அதில், அவர்களிடம் மெத் ஆம்பெட்டமைன் என்ற போதை பொருள் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவன் சபரி, 24, ரேபிடோ வாகனம் ஓட்டி வரும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மோரீஸ், 20, என தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, 4 கிராம் மெத் ஆம்பெட்டமைன், ஐபோன் உட்பட் இரண்டு மொபைல் போன்கள் மற்றும் கே.டி.எம்., டியூக் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.