/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி பணியாளரிடம் வழிப்பறி: இருவர் கைது
/
மாநகராட்சி பணியாளரிடம் வழிப்பறி: இருவர் கைது
ADDED : ஏப் 08, 2025 02:20 AM

அண்ணா நகர்,
திருமுல்லைவாயில் உப்பரப்பாளையம், பொத்துார் பிரதான சாலையை சேர்ந்தவர் பரத்குமார், 29; மாநகராட்சி ஊழியர். நேற்று முன்தினம் இவர், அண்ணா டவர் பூங்காவிற்குள் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருவர் பூங்காவில் நடந்து செல்வோடம் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்தனர். இதை, பரத்குமார் தட்டிக் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த அவர்கள், பரத்குமாரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்து தப்பினர்.
புகாரின்படி, அண்ணா நகர் போலீசார் விசாரித்து, நொளம்பூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராக்கி என்ற ராஜேஷ், 24, விக்னேஷ், 18, ஆகிய இருவரை கைது செய்தனர்.
இருவர் மீதும் குற்ற வழக்குகள் இருப்பது தெரிந்தது. விசாரணைக்கு பின், நேற்று இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.