ADDED : மே 10, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பெரம்பலுார் மாவட்டம், வேம்பன்தட்டை தாலுகாவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 43. இவர், மாதவரத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் அதிகாலை, கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது வாலிபர்கள் இருவர் அவரை வழிமறித்து, கத்தி முனையில் 1,100 ரூபாயை பறித்து தப்பினர்.
இது குறித்த புகாரை அடுத்து, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதில், தி.நகர், கண்ணாம்மாபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ், 23, மதுரவாயலைச் சேர்ந்த தினேஷ், 21, ஆகியோர், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட தினேஷ் மீது, மாங்காடு காவல் நிலையத்தில் மூன்று திருட்டு வழக்குகள் உள்ளன.