/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.50 லட்சம் நில மோசடி இருவர் கைது
/
ரூ.50 லட்சம் நில மோசடி இருவர் கைது
ADDED : ஜூலை 05, 2025 11:55 PM

ஆவடி, நில மோசடி வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். துரைப்பாக்கம், விநாயகர் நகர் தனியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் அருள், 62; துார்தர்ஷன் சேனலில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2,400 சதுர அடி நிலம், திருநின்றவூர், லட்சுமி பிரகாஷ் நகரில் உள்ளது.
இந்த நிலத்திற்கு போலிஆவணங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து விற்றது தெரிந்தது. இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில் ஏப்., 21ல் அருள் புகார் அளித்தார்.
விசாரித்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த திருவள்ளூர் மாவட்டம், வெள்ளானுாரைச் விஜயகுமார், 39, காஞ்சிபுரம், வஞ்சுவாஞ்சேரியைச் சேர்ந்த சேகர், 60, ஆகியோரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.