ADDED : செப் 06, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
--
செங்குன்றம்: செங்குன்றம், செட்டிமேடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் இருந்த போலீசார், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நாரவாரிகுப்பத்தைச் சேர்ந்த முகமதுபயாஸ், 22, என்பவரை பிடித்தனர்.
விசாரணையில், செங்குன்றம் அடுத்த செட்டிமேடில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, பெங்களுரூவில் இருந்து வாங்கி வரும் குட்கா, பான்பராக், ஹான்ஸ் போன்றவற்றை அங்கு பதுக்கி, கடைகளுக்கு விற்பது தெரியவந்தது.
வீட்டில் இருந்த 85 கிலோ போதை வஸ்துகளை பறிமுதல் செய்த போலீசார், முகமதுபயாஸ், வீட்டை வாடகைக்கு எடுத்த ராமு, 38, ஆகிய இருவரையும், செங்குன்றம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.